ARTICLE AD BOX
நாசரேத்: நாசரேத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாசரேத் பேரூராட்சி பஸ் நிலையம் அருகே அழகம்மாள் ஓடை உள்ளது. இந்த ஓடையில் கடந்த 10 நாட்களாக கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதன் அருகே கடைகள் மற்றும் பெட்ரோல்பங்க், தனியார் நிறுவனங்கள் உள்ளது. இந்த ஓடை சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
அது மட்டுமல்ல இதன் அருகே தான் வாகன காப்பகம் உள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகமாக காணப்படுவதுடன் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் அழகம்மாள் ஓடையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள், வியாபாரிகள், டிரைவர்கள் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நாசரேத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.