“நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான்!” வைரலாகும் சாய்ரா பானுவின் பதிவு..

21 hours ago
ARTICLE AD BOX

AR Rahman Wife Saira Banu Posts About Her Husband : இந்திய திரையுலகின் டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவர், இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்தாக கூறப்பட்டது. இதை கேட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் பதற்றமாகினர். இந்த நிலையில், அவரது மனைவி சாய்ரா பானு வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலி..?

சமீபத்தில் லண்டனில் ஒரு இசை கல்லூரியில் நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு, இது உண்மையா என அவரது சகோதரி பாத்திமாவிடம் கேட்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான், அடிக்கடி பயணம் மேற்கொண்டதால் அவருக்கு களைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். இதனால், அவருக்கு நெஞ்சுவலிதான் ஏற்பட்டதா என்பது கன்ஃபார்மாக தெரியவில்லை.

சாய்ரா பானு சொன்னது..

தனது கணவரின் இந்த நிலை குறித்து சாய்ரா பானு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில்,  “அனைவருக்கும் வணக்கம். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாக தகவல் வந்தது. அல்லாவின் கருணையால் அவர் இப்போது நலமுடன் உள்ளார்.” 

மேலும், “நான் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிரியவில்லை. நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான். 2 வருடங்களாக எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால்தான் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்பதால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். என்னை ‘முன்னாள் மனைவி’ என்று கூற வேண்டாம். நான் அவரது குடும்பத்தார் உள்பட அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம், அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி” என்று கூறியிருக்கிறார்.

டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்..

ஏ.ஆர்.ரஹ்மான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சில மணி நேரங்கள் கழித்து, ட்ரிப்ஸ் ஏற்றிய பிறகு டிஸ்சார்ஜ் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! அவசர சிகிச்சை-மருத்துவக்குழு கண்காணிப்பு..

மேலும் படிக்க | “விஜய் சீக்ரெட்டா ‘இதை’ பண்ணிட்டு இருக்காரு..” உண்மையை உடைத்த பாபா பாஸ்கர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article