ARTICLE AD BOX
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் தோல்விக்கான காரணங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி தோல்வி
டாஸ் வென்ற இந்திய அணி மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதை அறிந்த நிலையில் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரை தவிர மற்ற அனைவரும் பொறுப்பற்ற முறையில் ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதில் கேப்டன் பட்லர் மட்டுமே ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து விளையாடினார்.
44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் என 68 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் இல்லாததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணியை அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 12.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணம் குறித்து பட்லர் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முதலில் ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. தொடக்கத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் அதனை கடந்து வந்தால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நல்ல மைதானமாக இருந்தது. அங்கு சில நல்ல வீரர்கள் இருந்தனர். நாங்கள் விரும்பிய விதத்தில் விளையாட விரும்பினோம். ஆனால் சில நல்ல பந்துவீச்சாளர்களுக்கு எதிராக போதுமான செயல் திறன் இல்லாதவர்களாக நாங்கள் மாறினோம். ஆனால் ரன் அவுட் செய்யும் விஷயத்தில் எங்கள் அணி சார்பாக செயல்படுகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல்தான் காரணம்.. அந்த டெக்னிக்கை யூஸ் பண்ணா விக்கெட் விழும்னு தெரியும் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
அதை நாங்கள் உற்று நோக்குகிறோம். ஆர்ச்சர் எப்போதும் நல்ல நிலையில் இருக்கக்கூடிய வீரர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மாதிரியான வீரர். அவர் இன்னும் சில விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கலாம் என்று நினைத்தேன். மார்க் வுட்டும் நன்றாகவே பந்து வீசினார். இவர்கள் இருவரும் இணைந்த செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஆக்ரோஷமாக செயல்பட விரும்புகிறோம். நாங்கள் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்க விரும்புகிறோம். மைதானத்திற்கு மைதானம் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டியதே அவசியம். நான் கோச் மெக்கல்லத்தின் பெரிய ரசிகன். அவரும் இதே மாதிரியாக செயல்படுவார், அவரோடு ட்ரெஸ்ஸிங் ரூமில் இணைந்த பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.
The post நாங்க முதல்லயே இந்த தப்ப செஞ்சிட்டோம்.. எங்க அணி இதை முதலில் கவனிக்கணும் – ஜாஸ் பட்லர் பேட்டி appeared first on SwagsportsTamil.