ARTICLE AD BOX
நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் பிரிவு 2 ஆம் ஆண்டு மாணவர்கள் 37 பேரை 3 ஆசிரியர்கள் மூணாறுக்கு பஸ் பிடித்து சுற்றுலா அழைத்துச் சென்றனர். இவர்களுடன் வேறொரு ஆசிரியை மற்றும் அவரின் 10 வயது மகனும் சென்றிருந்தனர்.

நேற்று மூணாறில் மாட்டுப்பட்டி அணையை பார்த்துவிட்டு எக்கோ பாய்ண்ட் பகுதிக்குச் சென்றபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழந்தது. இதில் மாணவிகள் ஆதிகா19, வேணிகா19 நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை அருகே இருந்த பொதுமக்கள் டிரைவர்கள் உதவியுடன் மீட்ட போலீஸார் மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவர்கள் சுதன்19, கபின்11 உள்ளிட்ட சிலரை தேனி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்டதில் பூப்பாறை அருகே தேனி நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்சில் இருந்த சுதன் என்ற மாணவர் உயிரிழந்தார்.

மூணாறு பெரும்பாலான வளைவான சாலைகளை கொண்ட பகுதி என்பதால் வாகனங்கள் மிதமான வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதே விபத்துக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. நாகர்கோவில் இருந்த வந்து விபத்தில் சிக்கிய பஸ் டிரைவரும் கூட வேகமாகவே இயக்கியுள்ளார். விபத்து ஏற்பட்டவுடன் எவ்வித காயங்களும் இன்றி தப்பிய அவர் தலைமறைவாகிவிட்டார். மூணாறு போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Online Scams: கும்பமேளாவையும் விட்டுவைக்காத ஆன்லைன் மோசடி... விடுதி, விமான டிக்கெட் பெயரில் பணமோசடி