ARTICLE AD BOX
நரேந்திர மோடி Not Prime Minister அல்ல. அவர் Picnic Minister: வைகோ ஆவேசம்..!

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் "பிரைம் மினிஸ்டர்" அல்ல, "பிக்னிக் மினிஸ்டர்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் நிலவரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, "எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என்பதுதான். அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல, பிக்னிக் மினிஸ்டர்! ஒவ்வொரு நாடாக செல்கிற நேரத்தில், நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மாநிலங்களவை துணைத் தலைவர், "இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்றும் கூறியுள்ளார்.
மேலும், "இந்தி திணிப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
"என்னை பேசக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்"
என்றும் அவர் கூறினார்.
என்றும் அவர் கூறினார்.
Edited by Siva