நயன்தாராவுக்கும் மீனாவிற்கும் சண்டையா? இன்ஸ்டா பதிவால் புகையும் பகை..

11 hours ago
ARTICLE AD BOX

What Is The Fight Between Nayanthara And Meena : அடிக்கடி, சர்ச்சையில் சிக்கி வரும் சினிமா பிரபலங்களுள் ஒருவர் நயன்தாரா. சில நாட்களுக்கு முன்பு இவர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடந்தது. இதில் அவருக்கும் மீனாவுக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் குறித்துதான் தற்போது இணையத்தில் தீயாக பல தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தொடர் சர்ச்சையில் சிக்கும் நயன்தாரா:

தமிழ் திரையுலகில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. நம்பர் 1 நடிகையான இவர் இதுவரை ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல பேருடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் பலவித சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.

சிம்பு-நயன்தாரா பிரேக் அப், திருமணமான பிரபுதேவாவுடனான காதல், அந்த காதலின் முறிவு, விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு குழந்தைகளை சர்ரகஸி முறை மூலம் பெற்று கொண்டது, தனுஷுடனான பிரச்சனை என இவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை. தற்போதும், அது போலத்தான் தற்போதும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

மூக்குத்தி அம்மன் 2:

சில நாட்களுக்கு முன்பு, மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை விழா நடைப்பெற்றது. பிரசாத் தியேட்டரில் இதை நடத்துவதற்காக கோவில் போல செட் போடப்பட்டு, திருவிழா போல பூஜை நடந்தது. இதில், படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பு, மீனா, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மீனாவை கண்டுகொள்ளாத நயன்?

மீனா, எவ்வளவு புகழ்  பெற்ற நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்,  சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் திரையுலகில் கம்-பேக் கொடுத்தார். தற்போது இவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிக்கிறார். பூஜை விழாவின் போது, படத்தில் உபயோகப்படுத்தப்படும் சூலாயுதத்தை மீனாவும் குஷ்புவும் நயன்தாராவிடம் கொடுத்தனர். அப்போது நயன் அவர்களின் முகத்தை பார்த்து சிரிக்கவில்லை என கூறப்படுகிறது. 

Meen Nayan

இந்த விஷயம் முடிந்து சில நாட்களில், மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், நிறைய ஆடுகளுடன் இருக்கும் ஒரு சிங்கத்தின் போட்டோவை இணைத்திருக்கிறார். அதனுடன் “ஆடுகள் தன்னை பற்றி என்ன நினைக்கிறது சிங்கம் கவலைப்படாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு பதிவில், “உங்களது உள்ளத்தை மட்டும் நினைத்து பெருமை படுங்கள், அது அனைவிரடமும் இருக்காது” என்று கூறியிருக்கிறார். நயன்தாரா தன்னிடம் நடந்து கொண்ட முறை சரியில்லாததை அவர் குறிப்பிடுவதாக சிலர் கூறி வருகின்றனர். 

மீண்டும் அம்மனாக அவதாரம்..

நடிகை நயன்தாரா, முதன்முறையாக அம்மனாக நடித்திருந்த படம், முக்குத்தி அம்மன். 2020ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்தார். ஆனால், அவர் தற்போது வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால், இந்த படத்தை சுந்தர்.சி இயக்க வேண்டியதாயிற்று. தற்போது இரண்டாம் பாகத்திலும் நயன் அம்மனாக அவதாரம் எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | நயன்தாராவின் ஸ்ட்ராங்கான மனதுக்குக் காரணம் இதுதான்..வாழ்க்கையில்‘இந்த’ஒன்றைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்!

மேலும் படிக்க | நயன்தாரா உண்மையில் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? இயக்குநர் விஷ்ணுவர்தன் சொன்ன செய்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article