நயன்தாரா- திரிஷாவை விட விஜய்- சிம்பு தான் பெஸ்ட்.. ஏன்னா..! வெளிப்படையாக பேசிய சாந்தி மாஸ்டர்

17 hours ago
ARTICLE AD BOX

நயன்தாரா- திரிஷாவை விட விஜய்- சிம்பு தான் பெஸ்ட்.. ஏன்னா..! வெளிப்படையாக பேசிய சாந்தி மாஸ்டர்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: டான்ஸ் மாஸ்டராகவும் நடிகையாகவும் இருக்கும் சாந்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரில் யார் சிறப்பாக டான்ஸ் ஆடுவார்கள் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். அதேபோல நடிகர்களில் நடிகர் விஜய் மற்றும் சிம்பு தான் பெஸ்ட் ஆக டான்ஸ் ஆடுவார்கள் என்றும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை சாந்தியை சின்னத்திரை நடிகையாக பலருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் மெட்டிஒலி சாந்தி என்று இவரை அடைமொழியோடு ரசிகர்கள் கூப்பிடுவார்கள். மெட்டி ஒலி சீரியலில் "அம்மி அம்மி மிதித்து" என்ற டைப்பிங் பாடலுக்கு இவருடைய டான்ஸ் அந்த நேரத்தில் பெரிய அளவில் பாராட்டு பெற்றது.

Nayanthara Trisha Vijay

மறக்க முடியாத மெட்டிஒலி பாட்டு

90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான இந்த பாடல் அந்த காலகட்டத்தில் பல வீடுகளில் இரவு நேரம் ஒலிக்கும் போது இவருடைய டான்ஸ் பார்ப்பதற்காகவே பலர் அந்த சீரியலை பார்த்த கதை எல்லாம் உண்டு. இப்போது உள்ள சூழ்நிலையைப் போல அந்த காலகட்டத்தில் பெண்கள் டான்ஸ் மாஸ்டராகவும், டான்ஸ் துறையில் சாதிப்பதும் அவ்வளவு எளிமையான விஷயம் கிடையாது.

குறையாத நடன ஆசை

அந்த நேரத்தில் 10 வயதிலேயே டான்ஸ் ஆட தொடங்கிய சாந்தி மாஸ்டர் மெட்டி ஒலி சீரியல் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலமானார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே, ஜீ தமிழ் ஒளிபரப்பான முத்தழகு, சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் போன்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

தொடரும் சீரியல் வாய்ப்பு

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய தைரியமான பேச்சு இவருக்கு பல ரசிகர்களை கொடுத்தது. ஆனாலும் சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். அதுபோல பல நடிகைகள் நடிகர்களுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

திரிஷா எனக்கு ஃப்ரெண்ட் கிடையாது.. எங்களுக்குள்ள இந்த பிரச்சனை இருக்கு! ஓபனாக பேசிய நயன்தாரா
திரிஷா எனக்கு ஃப்ரெண்ட் கிடையாது.. எங்களுக்குள்ள இந்த பிரச்சனை இருக்கு! ஓபனாக பேசிய நயன்தாரா

சாந்தி மாஸ்டரின் பதில்

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் திரிஷா இவர்கள் இருவரில் யாருடைய டான்ஸ் பர்பெக்ட்டாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சாந்தி மாஸ்டர் இவர்கள் இருவருமே பர்பெக்ட்டான டான்ஸர் என்று சொல்ல மாட்டேன், இவர்கள் இருவருடைய டேன்ஸும் அவ்வளவு பர்பெக்டாக இருக்காது.

விஜய்- சிம்பு தான் பெஸ்ட்

நாம் சொல்லிக் கொடுத்ததை செய்வார்கள். ஆனால் துல்லியமான டான்ஸ் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதேபோல ஆண்களில் பெஸ்ட் டான்சர் என்றால் யாரை சொல்லுவீங்க என்று கேட்டபோது விஜய் மற்றும் சிம்புவை சொல்லுவேன். இவர்கள் இருவருடைய டான்ஸும் அவ்வளவு அழகாக இருக்கும். எந்த இடத்திலும் சரியாக டான்ஸ் ஆடுவார்கள்.

 கதாநாயகி வராததால் தான் ஓவர்நைட்டில் திரிஷா ஹீரோயின் ஆனாங்க.. அப்போ நடந்தது இதுதான்! ராதாரவி ஓபன்
கதாநாயகி வராததால் தான் ஓவர்நைட்டில் திரிஷா ஹீரோயின் ஆனாங்க.. அப்போ நடந்தது இதுதான்! ராதாரவி ஓபன்

சாந்தனுவின் சூப்பர் டான்ஸ்

மற்ற படி பாக்யராஜின் மகனான நடிகர் சாந்தனுவின் டேன்ஸும் அருமையாக இருக்கும். நான் பார்த்தவரையில் இவர்களுடைய டான்ஸ் தனித்துவமாக தெரியும் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். முன்னணி நடிகைகள் பற்றிய கேள்விக்கு சாந்தி மாஸ்டரின் பதில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
English summary
Actress Trisha and Nayanthara have openly talked about who will dance well during a recent interview with Shanthi, who is a dance master and actress. Similarly, actor Vijay and Simbu have shared some things that will dance as the best.
Read Entire Article