ARTICLE AD BOX
நயன்தாரா செய்தது சரிதான்.. பட்டம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல.. குஷ்பு பேட்டி!
சென்னை: சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. கோவில் வடிவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பு, ரெஜினா காஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, யாருக்கும் பட்டம் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றார்.
மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னால் முழுக்க முழுக்க சுந்தர் சி தான் இருக்கிறார். அதன் வெற்றியின் மூலம் கிடைத்த அனைத்து கிரேட்டும் அவருக்கு தான் போய் சேர வேண்டும். அவர்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். சினிமா என்பது , ஒரு டீம் ஒர்காக இருந்தாலும், கேப்டன் ஆப் த ஷிப்பாக இருப்பவர் சுந்தர்சி தான், ஆகையால் இந்த வெற்றி அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தம் என்றார்.

நிறைய படிப்பார்: மேலும், சுந்தர்சி, ஒரு கதையை யோசித்தால் அதை முதலில் குழந்தைகளிடம் தான் சொல்லுவார். அவர்கள் மூன்று பேரும் தான் கலந்து ஆலோசித்து பிளஸ் என்ன மைனஸ் என்ன என்பதை பேசிக்கொள்வார்கள் இதனால் தான், இந்த காலத்து இளைஞர்களுக்கும் சுந்தர் சி அவர்களின் படம் மிகவும் பிடித்திருக்கிறது. இன்றைய கால இளம் தலைமுறைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார். அதற்காக நிறைய படங்களை பார்ப்பார் நிறைய புத்தகங்களை படிப்பார்.
நயன் செய்தது சரிதான்: அப்போது செய்தியாளர் ஒருவர், நயன்தாரா இனிமேல் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என அறிவித்து உள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, அது நல்ல விஷயம்தான், அவருடைய பெயர் நயன்தாரா தான். எங்க காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுக்கவில்லை. பட்டம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பட்டம் என்றால், அது ஒருத்தருக்கு மட்டும்தான் தகுதியானதாக இருக்கும். அது யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது தமிழ்நாட்டு மட்டுமல்ல உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர்களின் பெயரை வைத்து கூப்பிட்டாலே நன்றாக இருக்கும் என்று குஷ்பு அந்த பேட்டி பேசி உள்ளார்.