ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி சுரேகாவிற்கு ஒரு அட்டையில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டெக்கரேஷன் செய்து கொடுக்க சுரேகா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். உடனே சூர்யா சூப்பரா இருக்கு கியூட்டாக இருக்கிறது. சூப்பர் கிப்ட் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். சுந்தரவல்லி உனக்காக விஐபி எல்லாம் இன்வர்ட் பண்ணி உனக்கு ஒரு பெரிய பார்ட்டி வச்சிருக்கேன் என்று சொல்ல நான் என் பிரண்டோட ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் என்று சொல்லுகிறார். அதற்கு சூர்யா இன்னிக்கு உன் இஷ்டத்துக்கு நீ போய் என்ஜாய் பண்ணு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனா ரேணுகாவிடம் என்னோட ஹீரோ பற்றி கேட்க இந்த ஹீரோ வேற ஒரு ஹீரோயின் கூட என்ஜாய் பண்றாங்க என்று சொல்ல அர்ச்சனா கடுப்பாகி போ என்று அனுப்பி வைக்கிறார். குடித்துக்கொண்டே அர்ச்சனா யோசிக்க சூர்யாவும் நந்தினியும் ரெசார்ட்டில் கொலுசு போட்டு விட்டதை நினைத்துப் பார்த்து அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காது என்று நினைக்கிறார். சுரேகா நண்பர்களுடன் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு வர அவர்கள் அனைவரும் சுரேகாவை வரவேற்று வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்கின்றனர். உடனே கொஞ்ச நேரத்தில் அர்ஜுன் வர அவன் சுரேகாவை காதலிப்பதாக கிண்டல் பண்ணுகின்றனர். அர்ஜுன் சுரேகாவிற்கு விஷ் பண்ண மற்ற நண்பர்கள் கிப்ட் இல்லையா என்று கேட்க அதெல்லாம் வாங்கியாச்சு அதுக்கு முதல்ல இந்த ரூம்ல லைட் ஆஃப் பண்ண வேண்டும் என்று சொல்லி லைட் ஆப் ஆகியவுடன் அதில் சுரேகாவின் குழந்தை புகைப்படத்திலிருந்து தற்போது வரை இருக்கும் புகைப்படத்தை பாட்டுடன் வீடியோ வருகிறது. உடனே வீடியோ பார்த்த சந்தோஷத்தில் சுரேகா அர்ஜுனை வந்து கட்டிப்பிடித்து நன்றி சொல்லுகிறார்.
இந்த போட்டோஸ் எல்லாம் உனக்கு எப்படி கிடைச்சது என்று கேட்க, அதெல்லாம் சீக்ரெட் என அர்ஜுன் சொல்லுகிறார். பிறகு கேக் கட் பண்ண அர்ஜுன் ஏற்பாடுகள் செய்ய சுரேகா அர்ஜுனையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சுரேகா கேக் வெட்டி அர்ஜுனுக்கு ஊட்டி விடுகிறார். உடனே அர்ச்சனா வீட்டுக்கு வந்த அர்ஜுன் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்லுகிறார். என்னாச்சு என்று அர்ச்சனா கேட்க, அவ சந்தோஷத்துல என்னை வந்து ஹக் பண்ணிட்டா இதுவரைக்கும் அவ என்கிட்ட ஒரு வார்த்தை பேசிட மாட்டாளான்னு நான் நிறைய ஏங்கி இருக்கேன் அவ இப்படி என்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு நீங்கதான் காரணம் என நன்றி சொல்ல இனிமே நீ என்னோட தம்பிபா என்று சொல்லுகிறார். இப்போதைக்கு நீயும் சுரேகாவும் லவ் பண்ணனும் அவ்வளவுதான் என்று சொல்ல நானும் சுரேகாவுக்கு பிடிக்கும்னு தான் நினைக்கிறேன் என்று சொல்ல, புடிக்க வைக்கிறேன் அதுக்கு தான் அக்கா இருக்கேன் இல்ல என்று சொல்லுகிறார். நீ போய் அவகிட்ட லவ் சொல்லு என்று சொல்ல இவ்வளவு சீக்கிரமா என்று கேட்க அதுக்குள்ள பாய் பெஸ்டி வந்து கொத்திகிட்டு போயிடுவான் என்று சொல்லி பயமுறுத்தி, நான் சொல்ற விஷயத்தை மட்டும் நீ பண்ணுனா அவளே தேடி வந்து உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவா என்று சொல்ல அப்படியா என்று கேட்கிறார். உடனே கையில் ஒரு மோதிரத்தை கொடுத்து நான் சொல்லும்போது சொல்ற நேரத்துல போட்டு விடு என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
சுந்தரவல்லி தோழி ஹேமா போன் பண்ணுகிறார். இருவரும் நலம் விசாரித்துவிட்டு வீட்ல ஒரு பங்க்ஷன் இருக்கு நீ பையன கூட்டிட்டு வந்துரு என்று சொல்ல, என்ன ஃபங்ஷன் என்று கேட்க சுரேகாவோட பர்த்டே சின்ன கெட் டு கெதர் இருக்கு வந்துடு என்று சொல்ல ஆனால் நான் பிரண்டா வரமாட்டேன், சம்பதியா தான் வருவேன் என்று சொல்ல சுரேகா சரி நல்ல விஷயம் தான் சொல்லி இருக்க, நீ பையனோட வந்துடு என்று சொல்ல அவரும் சந்தோஷமாக போனை வைக்கிறார். உடனே அருணாச்சலம் என்ன விஷயம் என்று கேட்க என் பிரண்டு ஹேமா பையனுக்கு சுரேகாவை கேட்டுருக்கா என்று சொல்ல இவ்ளோ பெரிய விஷயத்தை அசால்டா பேசிக்கிட்டு இருக்க அவ படிச்சுக்கிட்டு இருக்கா இவ்ளோ சீக்கிரம் எதுக்கு என்று கேட்கிறார். சூர்யா விஷயத்துல அவசரப்பட்ட மாதிரி சுரேகா விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம் என்று சொல்ல அவன் நீங்க வளர்த்த சூர்யா சுரேகா சுந்தரவல்லி வளர்த்த பொண்ணு நான் சொன்ன பேச்சை கேப்பா நான் போட்ட கோட்டை தாண்ட மாட்டா என்று சொல்ல நீ அசிங்கப்படக்கூடாது என்று தான் நான் சொன்னேன் அதுக்கு அப்புறம் உன் இஷ்டம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி கிச்சனில் ஸ்வீட் செய்து கொண்டிருக்க கல்யாணம் வாசனை பிடித்துக்கொண்டே என்னம்மா செய்ற வாசனை தூக்குது என்று கேட்க, இது அசோகா அல்வா இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.
சூர்யா கீழே இறங்கி வர அருணாச்சலத்திடம் நான் விவேக் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்ல விவேக் வீட்ல இல்ல நான் சுரேகாவோட பர்த்டே பங்க்ஷன்க்கு இன்வெயிட் பண்றதுக்காக போன் பண்ண, அதனால நீயும் கூட இருந்து எல்லா வேலையும் பாத்துக்கோ என்று சொல்லுகிறார்.அருணாச்சலம் மற்றும் சூர்யா இருவரும் பேசிக் கொண்டிருக்க வாசனையை முகர்ந்து சூப்பரான வாசனை வருது டாடி என்று சொல்ல இந்த வீட்ல சூப்பரான வாசனை வந்தா உன்னோட பொண்டாட்டி தான் ஏதோ சமைக்கிறா அர்த்தம் வா போய் பார்க்கலாம் என்று கிச்சனுக்கு வருகின்றனர் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுரேகாவிற்கு பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு கோலாகலமாக நடந்து கொண்டிருக்க அர்ச்சனா ஏற்பாடு செய்த அர்ஜூன் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து உள்ளே வந்து ரூமில் சுரேகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் குதிப்பதை நந்தினி கவனித்து விட வீட்டில் இருப்பவர்களிடம் வீட்டுக்குள்ள திருடன் வந்திருப்பதாக சொல்லுகிறார்.
அனைவரும் வந்து சுரேகாவின் ரூமை தட்ட குடும்பத்தினர் முன்னாள் மாட்டிக் கொள்கிறார். உடனே சுரேகா இவன் என்னோட பிரண்டு பர்த்டே விஷ் பண்ண வந்திருக்கான் என்று சொல்ல அதற்கு சுந்தரவல்லியின் தோழி உன் பொண்ணு உன்ன மாதிரி டீசண்டா இருப்பான்னு பார்த்தா இப்படி இருக்காளே என்று சொல்ல சுரேகா நந்தினி மீது கோபப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்ற எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post நந்தினியை தேடி வரும் பிரச்சனை, அசிங்கப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.