ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போனாங்க, இது எப்படி நடந்துச்சு ரேணுகா நேத்து நைட்டே காணோம்னு சொன்னா அப்போ ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தங்கி இருப்பாங்களா என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறார். உடனே சூர்யாவும் நந்தினியும் ரொமான்ஸ் பண்ணுவது போல காண்பிக்க உடனே அர்ச்சனா அப்படியெல்லாம் நடந்திருக்கக்கூடாது என்று கோபப்படுகிறார். உடனே அர்ச்சனாவின் மனசாட்சி வந்து அவங்க ரெசார்ட் போகவே சந்தோஷமா இருக்கதா அங்க அப்படி இருக்காது என்று நினைக்கிறதுல என்ன அர்த்தம் என்று கேட்கிறது. அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான் அவன் என்னோட சூர்யா என்று சொல்ல அதற்கு மனசாட்சி சூர்யா நந்தினியோட புருஷன், இப்போ இந்த நிமிஷம் கூட நந்தினி சூர்யா கூட தான் இருக்கா என்ன பண்ண முடியும் உன்னால என்று டென்ஷன் ஆக்கிவிட்டு சென்று விடுகிறது.
பிறகு ரெசார்டில் நால்வரும் விளையாடிக் கொண்டிருக்க அர்ச்சனா வந்து இறங்குகிறார். அங்கு வந்து நந்தினி,சூரியா தங்கி இருக்கிறவங்கள பாக்கணும் என்று சொல்ல அவர்கள் அழைத்து வருகின்றனர். நான்கு பேரும் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து அர்ச்சனா கடுப்பாகி நிற்கிறார். நந்தினி பார்த்தவுடன் அர்ச்சனம்மா என ஓடிப்போய் வரவேற்கிறார். எப்படி இருக்க நந்தினி என்று கேட்க நான் நல்லா இருக்கேன் நீங்க எங்க இங்க என்று கேட்க, மறுபக்கம் மூவரும் இவ எதுக்கு இங்க வரா என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா அவளை எவ்வளவோ திட்டினாலும் அவ கேட்க மாட்டேங்கிறா என்று சொல்லுகிறார். இதுல வேற நந்தினி அவள ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார்.
விஜி அர்ச்சனாவிடம் என்ன திடீர்னு வந்து இருக்கீங்க என்று சொல்ல இது எனக்கு தெரிஞ்ச அங்கிள் ஓட ரெசார்ட் எப்பவுமே மாசத்துக்கு ஒரு வாட்டி வருவேன் அது மாதிரி தான் இப்பயும் வந்தேன் பார்த்தா நீங்க இங்க இருக்கீங்க என்று சொல்ல சூர்யா விஜி விவேக் அனைவரும் எதுவும் பேசாமல் சென்று விடுகின்றனர். நந்தினி இடம் நீங்க இங்க எப்ப வந்தீங்க என்று கேட்டு விசாரிக்கிறார். உடனே உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளுங்க என்று அர்ச்சனா சொல்ல சரி நான் கிளம்புறேன் நீங்க இங்கதான இருப்பீங்க என்று கேட்கிறார் நீங்க கிளம்புற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேனு சொல்லுகிறார். நந்தினி சென்ற பிறகு அர்ச்சனா நீ இந்த ரெஸார்ட்ல எப்படி சந்தோஷமா இருக்குன்னு பார்க்கிறேன் என சொல்லுகிறார்.
நந்தினி ரூமில் அழுக்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சூர்யா என்ன பண்ற என்று கேட்கிறார். இதையெல்லாம் எடுத்து வச்சா வீட்டில் துவைச்சுக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேணாம் இங்கயே துவைத்து தருவாங்க நான் போன் பண்ணி இருக்கேன் என்று சொல்லுகிறார். இதுக்கு எதுக்கு காசு கொடுக்கணும் நம்ம வீட்ல போய் துவைச்சுக்கலாம் என்று சொல்ல, நீ எப்படியாவது போ, ஆனா அந்த அர்ச்சனா எதுக்கு இங்க வந்தா என்று சொல்ல அதுதான் தெரிஞ்சவங்க ரெசார்ட் என்று சொன்னாங்களே என்று சொல்ல தெரிந்திருந்தால் வேற எங்கேயாவது போய் இருக்கலாம் என்று சொல்லுகிறார். நீங்க ஏன் அவங்க மேல அவ்வளவு கோவமா இருக்கீங்க பாக்குறது பேசுறதெல்லாம் பார்த்தா நல்லவங்க மாதிரி தான் இருக்காங்க என்று சொல்ல நீ கிராமத்தில் இருந்து வந்திருக்க உனக்கு தெரியாது அவளைப் பற்றி எனக்கு தான் தெரியும் அவ என்ன வேணும்னாலும் பண்ணுவா என்று சொல்லுகிறார்.
அர்ச்சனா சூர்யா நந்தினி தங்கியிருக்கும் ரூமுக்கு எதிரில் வந்து என் கண்ணு முன்னாடியே ரெண்டு பேரும் ஒரு ரூம்ல இருப்பீங்களா என்று யோசித்துக் கொண்டிருக்க நந்தினி சூர்யாவிடம் நீங்களும் அர்ச்சனா அம்மாவும் லவ் பண்ணீங்களா என்று சொல்ல அவ அம்மா எல்லாம் கிடையாது என்று சொல்ல, சரி சார் நீங்களும் அர்ச்சனாவும் லவ் பண்ணீங்களா என்று கேட்கிறார். அன்னைக்கு வீட்டுக்கு வந்தபோது உங்களை அவ்வளவு லவ் பண்ணதா சொன்னாங்க என்று சொல்ல, அவளை நான் லவ் எல்லாம் பண்ணல என்று சொல்லுகிறார். அப்போ முன்னாடியே சொல்லி இருந்தா நானாவது தப்பிச்சிருப்பேன் என்று சொல்லுகிறார். உன்னை யாராவது இங்கே அடச்சியா வச்சிருக்காங்க என்று சொல்ல வேற என்ன பண்ணி இருக்கீங்க என்று நந்தினி கேட்கிறார். நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்ன மூட் அவுட் பண்ணிக்கிட்டு இருப்ப நான் பாட்டு கேட்கிறேன் என்ன டிவியை ஆன் பண்ணி பாட்டு கேட்கிறார்.
உடனே உள்ளே லவ் பாட்டு கேட்க அர்ச்சனா அதைக் கேட்டு விட்டு கடுப்பாகிறார். உனக்கு இவ்வளவு கேவலமான டேஸ்டா, நீ ரொமான்ஸ் பண்றதுக்கு நான் இருக்கேன் உனக்கான பர்ஃபெக்ட் ஆள் நான் தான். அவ உன் கால் தூசிக்கு கூட வரமாட்டா நீங்க இதுல ரொமான்ஸ் பண்றீங்களா என்ன பண்றேன்னு பாரு என்று சொல்லிவிட்டு வர நந்தினியும் ரூமில் இருந்து வெளியே வருகிறார். என்னம்மா பண்றீங்க என்று கேட்க, உடனே போன் சார்ஜர் மறந்துட்டேன் அதுதான் கேட்க வந்தேன் என்று சொல்ல சரி நான் எடுத்துட்டு வரேன் வாங்க என்று கூப்பிட நான் ரூமுக்கு போறேன் நீ அங்க எடுத்து கொண்டு வந்து கொடு என்று சொல்லுகிறார். நந்தினி சார்ஜ் எடுத்துக் கொண்டு வந்து அர்ச்சனாவிடம் கொடுக்க, அவரை வரவேற்று உட்கார வைக்கிறார். உடனே போகணுமா என்று அர்ச்சனா கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல ஏற்கனவே போர் அடிக்குது என்று சொல்லுகிறார். அதுதான் சூர்யா இருக்கான் இல்ல பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவர் கூட எனக்கென்ன பேச வேண்டியது இருக்கு என்று சொல்ல வேண்டுமென்றே அர்ச்சனா நீ என்ன படிச்சிருக்க எங்க பிஜி படிச்ச என்று கேட்க நீங்க என்னென்னமோ கேக்குறீங்க நான் என் தங்கச்சி உங்களுக்காக என்னால படிப்பை கண்டினியூ பண்ண முடியல என்று சொல்லுகிறார். நீங்க எங்க படிச்சீங்க என்று கேட்க லண்டனில் படித்ததாக சொல்லுகிறார் அப்போ உங்களுக்கு வெள்ளைக்கார பிரிண்ட் எல்லாம் இருப்பாங்க இல்ல என்று கேட்டுவிட்டு நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதீங்க உங்களுக்கும் சூர்யா சாருக்கும் என்ன பிரச்சனை உங்க பேர் எடுத்தாலே டென்ஷன் ஆகி கோபப்படுறாரு என்று சொல்ல, உடனே தெரிஞ்சுக்கிட்டு என்ன சேர்த்து வைக்க போறியா என்று கேட்க என்ன சொல்றீங்கமா புரியல என்று சொல்ல இல்ல எனக்கும் சூர்யாவுக்கும் இருக்கிற பிரண்ட்ஷிப்பை சேர்த்து வைக்க போறியா என்று கேட்டேன் என்று சொல்ல சேர்த்து வச்சுட்டா போச்சு அவ்வளவு தானே என்று சொல்ல, இவளை வைத்து சூர்யாவா ஆட்டி படைக்கலாம் போலையே என்று அர்ச்சனா யோசிக்கிறார்.
நானும் சூர்யாவும் நல்லா ஃப்ரண்டா இருந்தோம் ஆனால் எங்களுக்குள்ள சின்ன சின்ன பிரச்சனை வந்தது அதிலும் குறிப்பாக குடிக்க வேண்டாம் என்று சொன்னேன் அதுக்காக என்னோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டா அதுக்கப்புறம் எங்களோட கல்யாணம் அதோட நடந்ததெல்லாம் உனக்கு தெரியுமே என்று சொல்லுகிறார். ஒரு நாள் ஃப்ரீயா மனசு விட்டு பேசுவோம் என்று சொல்லுகிறார். உடனே இவ்வளவு நேரம் இங்கே இருக்க சூர்யா உன்ன தேட மாட்டானா என்று கேட்க, அவர் எங்க தனியா இருக்காரு குடிச்சுகிட்டு இருக்காரு என்று சொல்ல, இங்க வந்தோம் ஆரம்பிச்சுட்டானா என்று சொல்லிவிட்டு நம்ப வேணா இன்னைக்கு நைட்டு இங்கவே தூங்கலாமா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று சொல்லிவிட்டு தாராளமா தூங்கலாம் என்று சொல்லுகிறார். நந்தினியை போனுக்கு சார்ட் போட சொல்லிவிட்டு, அர்ச்சனா நந்தினிக்கு பாலில் மாத்திரையை தெரியாமல் கலந்து அதை நந்தினிக்கு கொடுக்க நந்தினி குடித்து விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் முதல்ல நைட் ஃபுல்லா நான் ரூம்ல இல்லை என்று சொல்லுகிறார். இங்க என் பக்கத்துல தான் இருந்தா கொஞ்சம் முன்னாடி கூட நான் உன்ன பார்த்தேன் என்று சொல்லுகிறார்.
காலையில் எழுந்து அதைப் பற்றி கேட்க நான் ரூம்லே இல்ல என்று நந்தினி சொல்வதாக விவேக் மற்றும் விஜியிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post நந்தினி சொன்ன வார்த்தை,குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.