ARTICLE AD BOX

நடிகை மமீதா பைஜூ மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது சென்சேஷனல் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். கடந்த வருடம் பிரேமலு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து ரெபல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக தமிழில் நடித்து அறிமுகமானார். தற்போது விஜய்யின் ஜனநாயகம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் குறித்து மமீதா பைஜூ சில விஷயங்கள் கூறினார். அதாவது அடுத்த மாதத்தில் இருந்து இந்த படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்குமாம். படம் வேற லெவலில் உருவாகி இருப்பதாகவும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் ஆக இந்த படம் அமையும் என்றும், தரமான சம்பவம் உண்டு, விஜய் சாரை இந்த படத்தில் வேற மாதிரி பார்ப்பீங்க. தொடர்ந்து அப்டேட் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.