ARTICLE AD BOX
நடு ராத்திரி.. நடு ரோடு.. வரலட்சுமியும், கணவரும் என்ன செஞ்சாங்க தெரியுமா?.. அதுவும் பனியனோடு
சென்னை: நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடந்தது. அதில் திரையுலக பிரபலங்கள் பெரிதாக கலந்துகொள்ளாவிட்டாலும்; சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க நிக்கோலாய் - வரலட்சுமி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்திருந்தார். பிறகு சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சாயா தேவி - சரத்குமார் தம்பதிக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. தனது தந்தை போன்றே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் வர; முதலில் சரத்குமார் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு சாயா தேவியும், ராதிகாவும் சேர்ந்து சரத்குமாரை எப்படியோ ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார்கள்.
போடா போடி: அதன்படி விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி படத்தில் வரலட்சுமி ஹீரோயினாக இன்ட்ரோ ஆனார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வரலட்சுமிக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதிலும் அவரது நடனமும், நடிப்பும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வரலட்சுமி வருவார் என்று பலரால் கணிக்கப்பட்டது. அதன்படிதான் அவருக்கு வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தாரை தப்பட்டை: அந்தவகையில் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. மேலும் வரலட்சுமிக்கும் பெரியதாக வாய்ப்புகள் எதுவும் வராமல் குறைய ஆரம்பித்தன. அதேசமயம் அவ்வப்போது சினிமாக்களில் தலை காண்பிக்கத்தான் செய்தார். கடைசியாக அவரது மேக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல் தமிழில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. அடுத்ததாக தமிழில் அவரது நடிபில் ஃபீனிக்ஸ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இதற்கிடையே அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். தனது மகளின் காதலை ஏற்றுக்கொண்ட சரத்குமார் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அதனையடுத்து கடந்த வருடம் தாய்லாந்தில் வைத்து அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ரிசப்ஷன் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
ட்ரெண்டாகும் வீடியோ: இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இருவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மும்பையில் நிக்கோலாயும், வரலட்சுமியும் நடு இரவில் வாக்கிங் மாதிரி சென்று பானி பூரி வாங்கி சாப்பிடுகின்றனர். அப்போது நிக்கோலாய் சட்டை போடாமல் வெறும் பனியன் மட்டுமே அணிந்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம ஜாலியாக இருக்கிறார்கள்; இந்த மகிழ்ச்சி எப்போதும் தொடர வேண்டும் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.