ARTICLE AD BOX
கடந்த ஒரு மாதமாக நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மாவின், பிரேக்கப் பற்றிய தகவல்கள் தான் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்த நிலையில், அது வதந்தியா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

பொதுவாக நடிகர் - நடிகைகள் காதலிப்பதும், பின்னர் பிரேக்கப் மூலம் தங்களின் காதல் உறவை முறித்து கொள்வதும், சினிமாவின் சகஜமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கோலிவுட் பிரபலங்கள் வாழ்க்கையிலேயே இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளதால், பாலிவுட் திரையுலகில் காதல் - பிரேக்கப் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் மாறிவிட்டது.

ஆனாலும் பிரபலங்கள் பர்சனல் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதில், பல ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், அவர்கள் வாழ்க்கையில் திருமணம் முதல் டைவர்ஸ் வரை எது நடந்தாலும் அது அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் கடந்த 3-வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்த தமன்னா - விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி பல ரசிகர்களை பீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், "இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் காட்டியதாகவும் ஆனால் விஜய் வர்மா அதற்க்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னரே இனி பிரியலாம் என முடிவு செய்தார்களாம். ஆனால் இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒன்றாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை நீக்கியதாக கூறப்பட்டது.

பாலிவுட் மீடியாக்களில் இவர்களின் பிரேக்கப் குறித்து தினம் தோறும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒரே இடத்தில் ஹோலி கொண்டாடியது... இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். இதுவரை இருவருமே தங்களின் பிரேக்கப் குறித்து வெளிப்படையாக சொல்லாத நிலையில், ரவீனா டாண்டன் இல்லத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில், கலந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இருவருமே ஒன்றாக எடுத்து கொண்ட மற்றும் ஒன்றாக சேர்ந்து ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பொதுவாக பிரபலங்கள் பிரேக்கப் ஆகிவிட்டாலும், நட்பு ரீதியான உறவை தொடர்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தமன்னாவும் - விஜய் வர்மாவும் அப்படிதான் இதில் கலந்து கொண்டார்களா? அல்லது உண்மையாகவே தமன்னாவின் பிரேக்கப் விஷயம் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தோல்வியில் முடிந்த தமன்னா - விஜய் வர்மா காதல்? மீண்டும் சிங்கிளான மில்க் பியூட்டி!