நடிகை அபர்ணா வினோத் விவாகரத்து

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை அபர்ணா வினோத், 2 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், தனது விவாகரத்தை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ‘நான் நின்னோடு கூடேயுண்டு’ என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கோகினூர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அபர்ணா வினோத், தமிழில் விஜய் நடித்த ‘பைரவா’ என்ற படத்தில், ஹீரோயின் கீர்த்தி சுரேஷின் தோழியாக வந்து, படத்தின் திருப்புமுனைக்கு உதவினார். பிறகு பரத் நடித்த ‘நடுவன்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். கடந்த 2022 நவம்பர் 28ல் ரினில் ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்த அபர்ணா வினோத், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அபர்ணா வினோத் கூறுகையில், ‘எனது திருமணம் உணர்ச்சிகரமான நிலையில் முடிவு செய்யப்பட்டு, பல கடினமான சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. தற்போது இதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்’ என்றார்.

Read Entire Article