ARTICLE AD BOX

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் , இயக்குனராகவும் வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது அதன் 2-ம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. 'எம்புரான்' பட ரிலீஸையொட்டி நடிகர் ரஜினிகாந்தை இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த பிருத்விராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,
"எம்புரான் படத்தின் டிரெய்லரை முதலில் பார்த்த நபர் நீங்கள்தான் ரஜினி சார். அதை பார்த்த பிறகு நீங்கள் கூறிய வார்த்தைகள் என் வாழ்வில் எப்போதும் நினைவுகூரத்தக்கது. அது எனக்கு மிகப்பெரிய விஷயம். எப்போதும் உங்களின் ரசிகன்" என்று தெரிவித்திருக்கிறார்.