நடிகர் மாதவன் நடிக்கும் டெஸ்ட்! அவரின் கதாபாத்திரம் இது தான்!

21 hours ago
ARTICLE AD BOX

'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் சரவணன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா?

நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந்த லட்சியம் நிறைவேற பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பயணம்  விடாமுயற்சி, அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் சிலிர்ப்பூட்டும் கதையாக அமையும்.

Brooo and you have alwaysssssss been there for me for everything. I think god for you bro https://t.co/wZTitzFp04

— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 15, 2025

நடிகர் ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, "சரவணன் ஒரு புத்திசாலி. இதுவே அவருடைய பலமும் சுமையும். சரவணன் தனது கனவை அடைய பல தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு அவர் தரும் விலை அதிகம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தனது கனவிற்காக ஒருவன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று வியந்து யோசித்தேன். போராட்டம், நம்பிக்கை மற்றும் மீண்டு வருதல் என ‘டெஸ்ட்’ பார்க்கும்போதும் பலரும் இதை தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

ஒருவனின் கனவு, லட்சியம் சோதிக்கப்படும்போது, அவன் எவ்வளவு தூரம் செல்வான்? சரவணனின் கதையை ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் பாருங்கள். இந்த படத்தில் ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  எஸ். சஷிகாந்த் எழுதி, இயக்க சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்) ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article