ARTICLE AD BOX

அலைகள் ஓய்ந்தாலும், வதந்திகள் ஓய்வதில்லை போல!. ஆம், சிறந்த நடிகர் மம்முட்டி குறித்த உண்மைத் தகவல் காண்போம்..
மிக இயல்பான நடிப்பின் மூலம் தனித்த முத்திரை பதித்த மெகா ஸ்டார் மம்முட்டி. தற்போது இவரது நடிப்பில் ‘பசூக்கா’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், ம ம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால், தன்னுடைய கமிட்மென்ட்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் வலைதளப் பக்கங்களில் தகவல் பரவியது.
இச்சூழலில், இதற்கு மறுப்பு தெரிவித்து மம்முட்டியின் பிஆர்ஓ தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
‘இது பொய்யான தகவல். ரமலான் பண்டிகைக்காக நோன்பு இருப்பதால் மம்முட்டி விடுப்பு எடுத்திருக்கிறார். இதனால்தான் அவர் படப்பிடிப்புகளில் இருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார்.
இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கி விடுவார்’ எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லால் -மம்முட்டி இருவரும் இணைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இப்படத்தின் பூஜை தொடங்கி இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். மேலும் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா கமிட் ஆகியுள்ளனர்.
முன்னதாக ‘கடல் கடனு ஒரு மாத்துக்குட்டி’ என்ற படத்தில் மெகா ஸ்டார்கள் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோயா?: இதோ விளக்கம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.