நடிகர் சுராஜ் வெஞ்சரமூடின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட எல் 2 எம்புரான் படக்குழு...

3 days ago
ARTICLE AD BOX

மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Character No: 12 🎭 Presenting Suraj Venjaramoodu as Sajanachandran in #L2E 🔥 In the world of #Empuraan every character leaves a mark. ⚡️ #L2E Releasing on 27th March 2025 🗓️

Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal @PrithviOfficial #MuraliGopypic.twitter.com/NLyC2dPTgR

— Lyca Productions (@LycaProductions) February 21, 2025


’லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் வெளியிட 'எல் 2 எம்புரான்' படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடிகர் அனீஷ் ஜி மேனனின் இப்படத்தில் 'சுமேஷ்' என்ற கதாபாத்திரத்திலும், முருகன் மார்டின் 'முத்து' என்ற கதாபாத்திரத்திலும், நடிகை சானிய ஐயப்பன் 'ஜான்வி' என்ற கதாபாத்திரத்திலும், சாய்குமார் 'மகேஷ் வர்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. 

Character No: 12 🎭 Presenting Suraj Venjaramoodu as Sajanachandran in #L2E 🔥 In the world of #Empuraan every character leaves a mark. ⚡️

🔗 https://t.co/fPx3mYK2dc#L2E Releasing on 27th March 2025 🗓️

Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal @PrithviOfficialpic.twitter.com/ryJMMTTBGw

— Lyca Productions (@LycaProductions) February 21, 2025



 
அதேபோல, 12-வது கதாபாத்திரமான நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இப்படத்தில் 'சஜ்ஜன்சந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் மலையாளத்தில் 'டிரைவிங் லைசன்ஸ்' மற்றும் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும். இவர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான 'முரா' படத்தில் நடித்துள்ளார்.

Read Entire Article