ARTICLE AD BOX
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று (மார்ச் 20) ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: ஒரே நாளில் 3 கிளர்ச்சியாளர்கள் கைது! அயுதங்கள் பறிமுதல்!
இந்த நடவடிக்கையினால் அப்பகுதியிலுள்ள நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இந்த சம்பவம் குறித்தும் முழுமையான தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.