தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைவதற்காக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை மாலை சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தோனி அணிந்திருந்த டீ-சர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த புள்ளிகள் மற்றும் கோடுகளை கண்ட ரசிகர்கள் என்னவென்று தெரியாமல் முதலில் குழம்பினர்.

பின்னர், அது ரேடியோ போன்ற தொலைதொடர்புக்காக பயன்படுத்தப்பட்ட ’மோர்ஸ் கோட்’ என்பதை கண்டறிந்து ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க : கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

கடைசி ஐபிஎல்

2020ஆம் ஆண்டு திடீரென்று இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சீசனில் கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் கொடுத்துவிட்டு சாதாரண வீரராக தோனி களமிறங்கினார். தொடர்ந்து, இந்த சீசனில் தனக்காக அதிக தொகையை செலவிட வேண்டாம் என்று அணியின் நிர்வாகத்திடம் தெரிவித்த தோனி, வெறும் ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வீரர்களுடன் இணைய புதன்கிழமை மாலை சென்னைக்கு வருகைதந்தார் தோனி.

அப்போது, அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டில் ’ஒன் லாஸ்ட் டைம்’ என்று மோர்ஸ் கோட் மூலம் வாசகம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

இதனை இணையத்தில் பகிர்ந்து, தோனியின் கடைசி ஐபிஎல் இது என்று விவாதித்து வருகின்றனர்.

மோர்ஸ் கோட் என்றால் என்ன?

மோர்ஸ் கோடை 1835 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. புள்ளிகள் மற்றும் கோடுகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு, நீண்ட தூர ரகசிய தொடர்புக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

உலகப் போர் காலங்களில் ரகசிய தகவல் பரிமாற்றத்துக்காக மோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டது. ரேடியோ, டெலிகிராஃப் போன்ற தொலைதொடர்பின் போது, எதிரி நாட்டினர் ஊடுருவி தகவலை கண்டறியாமல் இருக்க அந்த காலகட்டத்தில் மோர்ஸ் கோட் மிகவும் உதவியாக இருந்தது.

மோர்ஸ் கோட் முறையை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையில் பயன்படுத்தியுள்ளனர். உலகப் போர் காலங்களில் விமானிகளிடையே மோர்ஸ் கோட் மூலம் தகவலை பரிமாறினர்.

தற்போதுள்ள விமானிகள் மோர்ஸ் கோட்டை பயன்படுத்துவதில்லை என்றாலும் அவசரகாலங்களில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழக்கும்போது, ரேடியோ மூலம்செய்திகளை பெறுவதற்காக பயிற்சியின்போது மோர்ஸ் கோடை கற்றுக் கொள்கிறார்கள்.

Read Entire Article