ARTICLE AD BOX
தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வருவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
தினசரி வாழ்க்கையில் தோசை என்பது நாம் கேள்விப்படும் ஒரு உணவு தான். ஏனென்றால் ஒரு சில வீடுகளில் கண்டிப்பாக ஒரு வேளையாவது தோசை என்பது இருக்கும். ஏனென்றால்,தோசை என்பது பலருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்நிலையில் தோசை கல்லில் தோசை ஒட்டாமல் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தோசை கல் நன்றாக காய்ந்ததும் கால் கப் நீரை அதன் மேல் ஊற்றி, கல் முழுவதும் பரவலாக வரும்படி தோசை கரண்டியால் தேய்க்க வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றுவதற்கு சற்று முன் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி என்னையும் தண்ணீரமாக கலந்ததை தோசை கரண்டியால் கல் முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் வற்றியதும் துடைத்துவிட்டு பிறகு தோசை ஊற்றினால் தோசை இறுதி வரை ஒட்டாமல் வரும். கண்டிப்பா இத ஃபாலோ பண்ணி பாருங்க.