ARTICLE AD BOX
இரண்டாயிரம் வகையானக் காளான்களை உணவாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் இதில் 40 வகை காளான்கள் மட்டும் வர்த்தக ரீதியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. காளானில் புரதம் 2.9%, கொழுப்பு -0.4%, மாவுச்சத்து -5.3%, நார்ச்சத்து -1.1%, ஈரப்பதம் -90%உள்ளது. காளானில் உள்ள நார்ச்சத்து குடல் வியாதியுள்ளவர்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மிக நல்லது. இதிலுள்ள சோடியம், பொட்டாசியம் சத்து இரத்த கொதிப்பைத் தவிர்க்க உதவுகிறது.
பனி காலத்தில் காளான் உற்பத்தி சிறப்பாக இருக்கும். பனிக்காலத்தில் காளான் சீசன் நிலவுவதால் அதன் விலையும் குறையும். காளானில் உள்ள "க்ளுடாமிக்" அமிலம் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் வல்லமை பெற்றது. மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை காளான் உணவு தருகிறது.
காளானில் உள்ள "எரிடாடினைன்" என்ற வேதிப்பொருள், உடலுக்கு தீங்கு செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், இதயநோய்களும் வரும் வாய்ப்புகள் குறைகிறது. வெள்ளை காளானில் உள்ள செலினியம் சத்து புற்றுநோய்யை தடுக்கிறது என்கிறார்கள். ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
உணவில் தினமும் 18 கிராம் அளவில் காளான் சேர்த்துக்கொள்ள கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பு 45 சதவீதம் குறைகிறது என்பது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் காளான் சேர்த்துக்கொள்வது புரோஸ்டேட், செர்விகல் உட்பட சில கேன்சர்கள் ஏற்படுவதை தடுக்கிறது என்கிறார்கள்.
தொடர்ந்து காளான் உணவை எடுத்துக்கொள்கிறவர் களுக்கு வயதான காலத்தில் வரும் ஞாபகமறதி நோய் தவிர்க்கப்படுகிறது. மேலும் மூளை சம்மந்தமான குறைபாடுகளையும் தவிர்க்கிறது என்கிறார்கள் மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் காளானில் உள்ள "NGF"எனும் இரசாயனம்தான். இதுதான் மூளை நரம்புகளை பலப்படுத்தி ஞாபக மறதி நோயின் தாக்கத்தை தவிர்க்கிறது என்கிறார்கள்.
அனைத்து காளான்களும் உண்ணக்கூடியவை அல்ல. ஆரோக்கியமான மற்றும் உண்ணக்கூடிய காளான்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை சாப்பிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பென் ஸ்டேட் சென்டர் காளான் ப்ராடக்ட்ஸ் ஃபார் ஹெல்த் என்ற ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு ஐந்து சிறிய காளான்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
காளானில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, இதனை பனி காலத்தில் அடிக்கடி சாப்பிடுவது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக வைட்டமிண் D மற்றும் துத்தநாகம் அதிகம் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாவது (Immunity) மட்டுமின்றி எலும்பும் பலமாகும்.
காளான்களின் வேர்பாகத்தை பயன்படுத்தக் கூடாது.காளான்கள் மென்மையாக இருப்பதால் நீண்ட நேரம் கொதிக்க வைக்ககூடாது. காளான்களை சமைத்த உடனே சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டாலோ அல்லது சூடுபடுத்தினால் கெட்டுப்போகும். விஷத்தன்மை உள்ள காளான்கள் மங்கலான தாகவும், கருப்பாகவும் இருக்கும், துர்வாடையும் வரும்.