தொப்பை சட்டுனு குறைய காலையில் இந்த உணவு; வாழைப் பழத்தில் இந்த ரகம் ஓ.கே: டாக்டர் நித்யா

16 hours ago
ARTICLE AD BOX

தொப்பை சட்டுனு குறைய காலையில் இந்த உணவுமுறையையும் வாழைப் பழத்தில் இந்த ரகத்தையும் சாப்பிடலாம் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். தொப்பையைக் குறைக்க என்ன வகை வாழைப்பழம், என்ன உணவுமுறை சாப்பிட வேண்டும் என்று விரிவாகப் பார்ப்போம்.

Advertisment

உடல் எடையைக் குறைப்பதற்கும் தொப்பையை சட்டுனு குறைப்பதற்கும் டாக்டர் நித்யாவின் வரம் (Dr.Nithya's Varam யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா ஆலோசனைகளைக் கூறியுள்ளார். உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க டாக்டர் நிதியா கூறியதை அப்படியே இங்கே தருகிறோம். டாக்டர் நித்யா கூறியிருப்பதாவது: உடலில் கெட்டக் கொழுப்பு நிறைய சேர்ந்து ஒரு சிலருக்கு உடல் பருமனாக இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு தொப்பை பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு வயிறு உப்பசமாகிவிட்டு, சாப்பிடுகிறேனோ இல்லையோ ஆனால் வயிறு பெரியதாக இருக்கிறது என்று சொல்வார்கள். இதை பெல்லி ஃபேட் என்று சொல்வார்கள். ஒபிசிட்டி என்று சொல்கிற நிலை, இது பெரும்பாலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கக்கூடிய நபர்களுக்கு ஏர்ற்படலாம். பிரசவத்திற்குப் பிறகு, நிறைய பெண்களுக்கு இந்த வயிறு பகுதியில் சதை நிறைய சேர்ந்துவிடும். டிரஸ் எல்லாம் போடும்போது நார்மலா இருக்கிறது, ஆனால், வயிறு மட்டும் பெரியதாக தெரிகிறது. உடல் நார்மலாக இருந்தாலும் ஒரு சிலருக்கு வயிறு மட்டும் பெரியதாக இருக்கிற மாதிரி ஒரு நிலை இருக்கும். 

பொதுவாக பெண்களுக்கு எடை கூடுகிறது என்றால், அடி வயிற்றுப்பகுதி தொடைப்பகுதி இந்த இடத்தில்தான் ஃபேட் சேர்ந்து பெரியதாக தெரியும். அதற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக எடை கூடுவது தெரிய ஆரம்பித்துவிடும். அடுத்தது முதுகுப் பகுதியில், கை ஆர்ம்ஸ் பகுதியில் என இந்த இடங்களில் ஃபேட் சேர்ந்து தசைகள் பெருத்து உடல் பருமன் ஆரம்பிக்கும்.

இந்த பெல்லி ஃபேட் எப்படி குறைப்பது, ஒரு சிலர் எடை குறைக்கிறேன் என்று தொடங்குவார்கள். தொடங்கிய பிறகு, தினசரி ஒரு 15 நாட்களுக்கு உடற்பயிற்சியோ அல்லது சாப்பாடோ அல்லது மருந்து பொருட்களை, உணவு முறைகளை ஃபாலோ பண்ணுவார்கள். கொஞ்ச நாளுக்கு பிறகு அதை அப்படியே விட்டுவிடுவார்கள். அதற்கு பிறகு, ஒரு முக்கியமான விஷயம், எல்லாருக்கும் தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால், மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய சில எடை குறைப்பு ஹெல்த் மிக்ஸ் என்று கிடைக்கிறது. இதையெல்லாம், நிறைய பேர் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், பக்கவிளைவுகள் வந்து பாதிப்பு ஏற்பட்டு நம்மிடம் சிகிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால், நீங்கள் ஏதாவது, எடை குறைப்புக்கு ஹெல்த் டிரிங்ஸ் எடுக்கிறீர்கள் என்றால் டாக்டரிடம் ஆலோசனை செய்த பிறகு எடுத்துக்கொள்ளுங்கள்.

Advertisment
Advertisements

ஏனென்றால், இதனால், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளோ, செரிமானம் பாதிப்புகளோ உள்ளது என்றும் அந்த மருந்தை விட்ட பிறகு, இரண்டு மடங்கு எடை கூடிவிட்டேன் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். முக்கியமாக அது நம்முடைய ஹார்மோன்களை தொந்தரவு செய்யாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்த பிறகு, அந்த மாதிரியான ஹெல்த் டிரிங்க்ஸை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

சிலர் தினமும் எடை மெசின் மீது நின்று எடையைக் குறைக்க வேண்டும் என்று மன உளைச்சலுக்கு ஆளாகி எடையைக் குறைக்க முயற்சி செய்வார்கள். அப்படி இல்லாமல், ரொம்ப எளிமையாக உடல் எடையைக் குறைப்பதற்கு தொப்பையைக் குறைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. 

இந்த உணவுமுறையை மருத்துவத்தை ஃபாலோ செய்வதற்கு முன்னாடி, வயிறு பகுதியை டேப் மூலம் அளவு எடுத்து ஒரு நோட்டில் தேதி குறிப்பிட்டு எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதே போல, தொடை பகுதியில் அளவு எடுக்க வேண்டும். அதாவது, தொடையின் மேல்பகுதி, தொடையின் கீழ்பகுதி  அதாவது முட்டிக்கு 4 விரல் அளவுக்கு மேல்பகுதி என அளவு எடுத்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 

அதற்கு பிறகு, உணவுமுறை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு, மாதத்திற்கு ஒருமுறை மீண்டும் அளந்து பார்த்தால் போதும். அதனால், இடையில் இடையில் அளவு எடுத்துப் பார்த்து டென்சன் ஆக வேண்டாம்.

ஒரு மாதத்திற்கு நாம் எவ்வளவு குறைகிறது என்று தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ரிசல்ட் இருக்கும். இதில் அடிப்படையில் உணவுமுறையில் பெல்லி ஃபேட் குறைக்க வேண்டும் என்று ஜிம்முக்கு போய் 24 மணி நேரம் வொர்க்அவுட் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கிடையாது. நார்மலா நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை செய்வது, நடந்து செல்வது, கொஞ்சதூரம் ஜாகிங் செய்வது, அல்லது காலையில் ரொம்ப எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் செய்வது இதன் மூலமாகவே நாம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

ரொம்ப எளிமையாக சொன்னால், ஒரு நாளைக்கு 10 முறை மாடிப் படிகளை ஏறி இறங்கி தோப்புக்கரணம் போட்டு எடை குறைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் எளிமையாக சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், நம்முடைய உடலின் தசைகளை எந்த அளவுக்கு வொர்க்அவுட் பண்ணி உடலுக்கு ஹீட் கொடுக்கும்போது, தசைகளுக்கு இடையில் இருக்கக்கூடிய ஃபேட், கலோரிஸ்களாக பர்ன் ஆகி வெளியில் வருகிறது. இதனுடன் நாம் எனென்ன மாதிரியான உணவுமுறைகளை ஃபாலோ பண்ணுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

உணவுமுறைகளைப் பொறுத்தவரைக்கும் ஈஸியாக டயஜஸ்ட் ஆகிற மாதிரி உணவுகளை நாம் ஃபாலோ பண்ண வேண்டும். மிகம் எளிதாக செரிமானம் ஆகிற கலோரிகள் இருக்கக்கூடிய உணவுமுறைகள் பார்க்கலாம்.

காலையில் நிறைய சாப்பிடுவது, மூன்று வேளையும் அரிசி சோறு சாப்பிடுவது என்ற பழக்கம் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். காலையில் காய்கறிகள், பழங்கள், சமைக்காத உணவுகளை எடுத்துக்கொண்டால் நம் உடலுக்கு இன்னும் நல்லது. 

இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு பவுலில் பச்சைக் காய்கறிகளை கட் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பயறு வகைகள் பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு இதில் ஏதாவது ஒன்றை முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சமாக பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் என்றால் வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடிவிடும் என்று பயப்பட வேண்டாம். இதில் எந்த மாதிரியான வாழைப்பழம் எடுக்க வேண்டும் என்றால், சிறிய அளவில் இருக்கும் கற்பூரவல்லி, ஏலக்கி, பேயன் பழம் போன்ற வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் கொஞ்சம் பால் மற்றும் பழச்சாறு குடிக்கலாம். தினமும் காலையில் இந்த மாதிரி உணவுமுறையை நாம் எடுத்துக்கொள்ளும்போது, கூடுதலாக இருக்கக்கூடிய ஃபேட்,  அதிலும் பெல்லி ஃபேட் நன்றாக கரைய ஆரம்பிக்கும். உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக அசைவ உணவைத் தவிர்த்துவிட்டு, பசித்து உணவு எடுத்தால் போதும்.  

மதிய நேரத்தில், சாப்பிடும்போது, நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று, சிறுதானிய வகைகளில் ஒன்றோ என வடித்த சாதமாக காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடலாம். அதற்கு ஒரு நல்ல பலன் கிடைக்கிறது என்று சொல்லலாம்.

இரவு நேரத்தில் சீக்கிரமாக உண்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 8 மணிக்கெல்லாம் உணவு எடுத்துக்கொண்டு முடித்துவிட்டு, சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் நடப்பது நல்லது. ஒரு 10 நிமிடம் நடந்துவிட்டு தூங்க செல்ல வேண்டும். தினமும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுமுறையிலும் சரி, வொர்க்அவுட்டிலும் சரி நமக்கு சரியான பலன் இல்லாமல் போய்விடும். 

இதற்கு இடையில் என்னென்ன செய்யலாம் என்றால், எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். அதாவது, 300 மி.லி வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, அதில் இஞ்சி சாறு கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொண்டால் உடலில் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கும். கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். 

மேலும், நாங்கள் எடை குறைப்பதற்கு உணவுமுறையை அளிக்கிறோம், குறிப்பாக நத்தைச்சூரி சூரணம் கொடுக்கிறோம், ஹெர்பல் டிடாக்சி கொடுக்கிறோம். அதே போல ஒவ்வொருத்தருக்கும் உடல் எடைக்கு ஏற்ப எடையைக் குறைப்பதற்கான மெடிசின்களைக் கொடுக்கிறோம். ஏனென்றால், ஒரு சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். பி.சி.ஓ.டி பிரச்னை, ஹார்மோன் தொடர்பான பிரச்னை இருந்தால் அதற்கு ஏற்ற மாதிரியான உணவுகளைக் கொடுத்து எடை குறைக்கலாம். அதனால், பெல்லி ஃபேட் இருந்தால், அதை ரொம்ப எளிதாகக் குறைக்க முடியும்.” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

Read Entire Article