ARTICLE AD BOX
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பார்கள் அப்படித்தான் நாம் உடல் எடையைக் குறைத்தாலும் வயிற்றுப் பகுதியிலிருக்கும் கொழுப்பை குறைக்க முடியாது. இதனால், பலரும் இந்த தொப்பை கொழுப்பு குறைக்க முடியவில்லையே என்று கவலையிலும் கொபத்திலும் இருப்பார்கள். அவர்களுக்கு தொப்பை கொழுப்பு குறைய இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று வி.ஜே. ரம்யா சில டிப்ஸ் கூறியுள்ளார்.
தொப்பை கொழுப்பு குறைப்பதற்கு, ஸ்டே டியூனெட் வித் ரம்யா யூடியுப் சேனலில் வி.ஜே. ரம்யா கூறியுள்ள டிப்ஸ் என்ன என்று இங்கே பார்ப்போம்.
“அனைத்து வகையான இனிப்புகளையும், ரீஃபைனெட் கார்ப்போஹைட்ரேட்களையும் தவிர்க வேண்டும். அது, சர்க்கரை, வெல்லம், தேன், சுவீட் என எல்லா வகையான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.
வெள்ளை நிறத்தில் நீங்கள் பார்க்கிற எல்லா கார்ப்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்காக, சாப்பிடாமல் பட்டினி கிடக்க வேண்டாம். சர்க்கரை குறைவாக இருக்கிற பழங்கள், காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகள், பருப்பு, புரோட்டின், ஃபைபர் சத்து உணவுகளை சாப்பிடலாம்.
இனிப்பு கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில், சர்க்கரை இல்லாமல் 1 கப் பிளாக் காஃபி, டீ குடிக்கலாம். வெந்நீர், கிரீன் டீ, ஹெர்பல் டீ சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.
விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
15 நிமிடம் மட்டும் உங்களிடம் நேரம் இருக்கிறது என்றால், 1 நிமிடம் வேகமாக உடற்பயிற்சி செய்யுங்கள். சிறிது நேரம் மெதுவாக செய்யுங்கள். அதாவது 1 நிமிடம் வேகமாக ஓடுங்கள். சிறிது நேரம் மெதுவாக நடங்கள்.
போதுமான தூக்கம் தேவை. 8-9 மணி நேரம் தூக்கம் தேவை. தூங்குவதற்கு முன் கவலை ஏற்படுத்தும் நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். நிம்மதியாக தூங்குங்கள்.
புரோட்டின் உணவு எடுத்துக்கொள்வதை அதிகரியுங்கள். புரோட்டின் அதிகமாக சாப்பிடும்போது, உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறையுங்கள். உங்களை பாசிட்டிவ்வாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன்னால், குளியுங்கள். உங்கள் மனதில் உள்ள அழுத்தங்களை, எண்ணங்களை எழுதுங்கள்.” என்று வி.ஜே. ரம்யா கூறியுள்ளார்.