ARTICLE AD BOX
ரவை கொண்டு சுவையான முறுக்கு செய்வது எப்படி என தற்போது காணலாம். இதனை செய்வதற்கு மிக எளிமையாக இருப்பதால், குறைவான நேரத்தில் செய்து முடிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர்,
உப்பு,
சன்ஃபிளவர் ஆயில்,
ரவை,
ஓமம்,
பச்சரிசி மாவு,
எண்ணெய்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடாகும் போது ஒரு டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர், இரண்டு டேபிள் ஸ்பூன் சன்ஃபிளவர் ஆயில் சேர்த்து கலக்க வேண்டும்.
இதையடுத்து 250 கிராம் ரவையை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். தண்ணீர் வற்றும் வரை ரவையை கலக்க வேண்டும். தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, 5 நிமிடங்களுக்கு ரவையை மூடி வைக்க வேண்டும்.
இப்போது ரவையை ஒரு தட்டில் மாற்றி அத்துடன் 50 கிராம் ஓமம் மற்றும் ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து பிசைய வேண்டும். இவ்வாறு பிசையும் போது கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக மாவை முற்றிலும் பிசைந்ததும் அதன் மீது சிறிதளவு எண்ணெய் தடவ வேண்டும்.
இதையடுத்து, முறுக்கை வட்ட வடிவமாக பிழிந்து எண்ணெய்யில் சுட்டு எடுக்கலாம். இவ்வாறு செய்தால் சுவையான முறுக்கு ரெடியாகி விடும்.