ARTICLE AD BOX
தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை.. 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,400-க்கு விற்பனை!
பிப்ரவரி 27-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதம் 2-வது நாளாக தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,010-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,738-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (26/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,050-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,400-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,500-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,782-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,256-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,820-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,620-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,960-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 66,200-க்கும் விற்பனையானது.
இன்றைய (27/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 40 குறைந்து ரூ. 8,010-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.320 குறைந்து ரூ. 64,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.80,100-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 44 குறைந்து ரூ. 8,738-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.352 குறைந்து ரூ. 69,904-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.440 குறைந்து ரூ. 87,380-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 30 குறைந்து ரூ. 6,590-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.240 குறைந்து ரூ. 52,720-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 300 குறைந்து ரூ. 65,900-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,06,000-த்திற்கு விற்பனையாகிறது.