தொடரும் ஜிம் மரணங்கள்…!! “திடீர் மாரடைப்பு”… பரிதாபமாக இறந்த 26 வயது வாலிபர்…!!

13 hours ago
ARTICLE AD BOX

உத்தரப்பிரதேசம் காசியாபாத் நகரில், 26 வயது ஜிம் டிரெய்னர் கணேஷ் ஷர்மா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராபுரம் பகுதி, ஷக்தி கந்த் 2-ல் அமைந்துள்ள “Fitness 1 Gym” எனும் உடற்பயிற்சி மையத்தில் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சியாளராக பணியாற்றி வந்த கணேஷ் ஷர்மா, வழக்கம்போல ஜிம்மில் தனது வேலைகளைச் செய்து வந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் காணப்படாததால், ஜிம் ஊழியர்கள் அவரை தேடினார்கள். இரவு 9 மணியளவில், உடைமாற்ற அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததை கவனித்த ஜிம் ஊழியர்கள், சுவரை தாண்டி உள்ளே சென்று பார்த்தபோது, கணேஷ் ஷர்மா மயக்க நிலையில் கிடந்ததை கண்டனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக  டாக்டர்கள் கூறிவிட்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலில் எந்த காயங்களும் இல்லை என்று தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும் போது மற்றும் நடனம் ஆடும் போது என்று திடீரென இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 26 வயதுடைய ஜிம் டிரைனர் ஒருவர் ஜிம்மில் மயங்கி விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article