ARTICLE AD BOX
சென்னை,
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதல்-மந்திரிகள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முதல்-மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்தில் வைத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி அழைப்பிதழை வழங்கினர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் யார்-யார்? என்பது குறித்த பட்டியலை திமுக எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்க்கது.