ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் வரவேற்றார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, மூன்று மாநில முதல்வா்கள், ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான ஆலோசக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது: முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் வரவேற்றார்.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட பிற மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.