தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் - ஆ.ராசா எம்.பி.

1 day ago
ARTICLE AD BOX

சென்னை,

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தொகுதி மறுவரையறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குழப்பமான பதில் அளித்துள்ளார். வட மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைத்து தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகம் கொடுத்தாலும் அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கினாலும் எங்களுக்கு அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை என அமித்ஷா கூறியுள்ளது குழப்புகிறது" என்று அவர் கூறினார்.


Read Entire Article