தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

14 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான ஸ்டார்பக்ஸில் தேநீர் விநியோகம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் டெலிவரிக்காக வாங்கிய தேநீர் கோப்பையை, மடியில் தனது கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக சூடான தேநீர் சிந்தியது.

தேநீர் சிந்தியதில், மைக்கேலின் தொடை மற்றும் தொடை இடுக்குகளில் தீக்காயம்போன்று ஏற்பட்டு பாதிப்படைந்தார். இதனையடுத்து, அவர் பல்வேறான தோல்மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

இதனிடையே, தேநீர் கோப்பையை சரியாக மூடாமல் கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியரால்தான், தனக்கு சிதைவு, வலி, செயலிழப்பு, உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் மைக்கேல் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க: 250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகால விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட மைக்கேலுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம், ஸ்டார்பக்ஸுக்கு உத்தரவிட்ட இழப்பீடு தொகையான 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 432 கோடி) அதிகமாக இருப்பதாகவும், அதனைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

Read Entire Article