ARTICLE AD BOX
கிரேட்டா் நொய்டாவில் வரும் மாா்ச் 21 முதல் 27 வரை நடைபெறவுள்ள தேசிய எலைட் மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 300 வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
உத்தரபிரதேச குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் உலக மற்றும் பிஎஃப்ஐ விதிகள் கடைபிடிக்கப்படும். ஒவ்வொரு மாநிலம் சாா்பில் அதிகபட்சம் 10 போ் கொண்ட அணி பங்கேற்கலாம்.
தொடக்க சுற்று மாா்ச் 21-24 தேதிகளிலும், 25-இல் காலிறுதியும், 26-இல் அரையிறுதி, 27-இல் இறுதிச் சுற்றும் நடைபெறும்.
நடப்பு சாம்பியன் ரயில்வே விளையாட்டு வாரியம் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது.