தேங்காய் வேண்டாம்... சின்ன வெங்காயம் சேருங்க: வித்தியாசமாக கருவேப்பிலை துவையல்; செம்ம ஹெல்தி

23 hours ago
ARTICLE AD BOX

தேங்காய் சேர்க்காமல், சின்ன வெங்காயம் சேர்த்து வித்தியாசமான முறையில் கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம். இந்த கருவேப்பிலை துவையல் செம்ம ஹெல்தி, உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Advertisment

ஜெயா டிவியில் என் சமையல் அறையில் நிகழ்ச்சியில் கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி என்று செய்து காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக, கருவேப்பிலை துவையல் தேங்காய் சேர்த்து செய்வார்கள். ஆனால், இந்த கருவேப்பிலை  துவையல் தேங்காய் சேர்க்காமல், சின்ன வெங்காயம் சேர்த்து வித்தியாசமான முறையில் செய்திருக்கிறார்கள்.

கருவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை 1 கப் அளவு

Advertisment
Advertisements

காய்ந்த மிளகாய் 5 

உளுந்து 2 டேபிள்ஸ்பூன் அளவு

பூண்டு 5 பல்லு

சின்ன வெங்காயம் 6

பெருங்காயம் சிறிய துண்டு

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

https://youtu.be/i13ofTh_HMM?si=hrn6OdvxyfWcE6GY

கருவேப்பிலை துவையல் செய்முறை:

முதலில் கருவேப்பிலை இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவி, ஈரமில்லாமல் ட்ரையாக வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, ஸ்டவ்வைப் பற்றவைத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும்,  உளுந்து போடுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாயைப் போடுங்கள். உளுந்து அரைவாசி வறுபட்ட பிறகு, பெருங்காயத்தை சேருங்கள். உளுந்து கருகாமல் சிவக்க வறுக்க வேண்டும். பிறகு, அதில் கருவேப்பிலையைப் போட வேண்டும், தேவையான அளவு உப்பு போடுங்கள், சின்ன வெங்காயம் போடுங்கள், பூண்டு போடுங்கள், நன்றாக வதக்குங்கள். கருவேப்பிலை வதங்கும் நேரம்தான், பூண்டு, வெங்காயமும் வதங்கும்.  பிறகு, புளி நார் இல்லாமல், போடுங்கள். நன்றாக வதக்குங்கள். 

கருவேப்பிலை வதங்கிய பிறகு, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். வதக்கிய கருவேப்பிலையை நன்றாக ஆற வைத்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவேப்பிலை துவையல் தயார். அரைத்த பிறகு, அதை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், 1 வாரம் வரை கெடாமல் பயன்படுத்தலாம். 

Read Entire Article