ARTICLE AD BOX
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர போலீசார் திடீரென நேற்று கைது செய்தனர். அரசியலில் ஈடுபட்டிருந்த போசனி, கடந்த ஆட்சியின்போது பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர் விமர்சனம் செய்தார். ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்கு நேற்று சென்ற அனந்த்பூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர். தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.