ARTICLE AD BOX
பஞ்சாப் மாநிலத்திலும் அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ள சூழலில், புதிய பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழி முக்கிய பாடம் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இது பஞ்சாப் மொழி பேசும் மக்களுக்கு பாஜக மற்றும் சிபிஎஸ்இ அமைப்பு இழைத்துள்ள துரோகம் என ஆம் ஆத்மி அரசு விமர்சித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப்பில் அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி மொழியை தவிர்க்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே குற்றச்சாட்டை முன்வைத்து தெலங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது.