ARTICLE AD BOX
திருமலை: தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையில் இடதுபக்க கரையில் சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த பணியில் கடந்த 22ம்தேதி சுமார் 50 ஊழியர்கள் ஈடுபட்டனர். 14வது கிமீ தூரத்தில் பணியில் ஈடுபட்டபோது மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 8 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நேற்று 4வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் நேற்று கூறுகையில், `8 பேர் சிக்கிய பகுதியில் சேறும், சகதியும் நிரம்பி காணப்படுகிறது. குறிப்பாக கழுத்தளவு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் கடும் சிரமம் நீடிக்கிறது. எனவே 8 பேரையும் உயிருடன் கொண்டு வர முடியுமா? என்பதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் போராடி வருகிறோம், என்றார்.
The post தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு appeared first on Dinakaran.