ARTICLE AD BOX
தெலங்கானா மாநிலத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சுரங்கம் இடிந்த இடத்தில் அதிகளவில் சேறும் சகதியுமாக உள்ளதால், அவற்றை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுரங்கத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் சகதியை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களை மீட்பதில் சிரமம் நீடிக்கிறது என்றும் அமைச்சர் கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் டோமலபென்டா பகுதியில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் பணிக்காக சுரங்கம் தோண்டப்பட்டது. நுழைவு வாயிலில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் பொறியாளர்கள் உட்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இரண்டு நாட்களை கடந்து மீட்பு பணி தொடர்கிறது.