“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்! 

8 hours ago
ARTICLE AD BOX
ADMK Former Minister Sellur Raju

சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

அவர் கூறுகையில், ” மாநில நிதிநிலை அறிக்கையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என கூறியுள்ள்ளீர்களே. திமுக ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது, அதற்குள் எப்படி விமான நிலையம் அமைப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தண்ணீரில் தெர்மாகோல் விடுவது எளிது. ஆனால் விமான நிலையம் அமைப்பது கடினம். திமுக ஆட்சி ஓராண்டு மட்டுமல்ல இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி செய்யும். ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். அந்த விமான நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார்” என பதில் அளித்தார்.

தெர்மாகோல் விவகாரம் பற்றி கிண்டலாக அமைச்சர் பேசியதை தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ” அதிகாரிகள் சொல்லித்தானே நாங்கள் அதனை செய்தோம். ஆனால், தற்போது வரை தெர்மாகோல், தெர்மாகோல் என எல்லோரும் என்னை ஓட்டுகின்றனர். ” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க நீர் மேற்பரப்பில் தெர்மாகோல் விடும் முயற்சியில் அதிகாரிகளுடன் மேற்கொண்டார். ஆனால் தண்ணீரில் மிதக்கவிட்ட தெர்மாகோல்கள் சிறிது நேரத்திலேயே கிழிந்து கரை ஒதுங்கின. இந்த திட்டமானது அரசியல் களத்தில் மட்டுமல்லாது, இணையவாசிகள் மத்தியிலும் கிண்டலுக்கு உள்ளானது.

Read Entire Article