"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!

3 days ago
ARTICLE AD BOX

நீங்கள் ஸ்லிம்மாக இருக்கிறீர்கள், பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கீங்க, உங்களை பிடித்திருக்கிறது என தெரியாத பெண்ணிடம் இரவு நேரத்தில் மெசேஜ் செய்தால் அது ஆபாசத்திற்கு இணையானது என செஷன்ஸ் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் கவுன்சிலருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என உறுதி செய்த மும்பை திண்டோஷி கூடுதல் அமர்வு நீதிபதி டி ஜி தோப்ளே, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தெரியாத பொண்ணுக்கு மெசேஜ் பண்ணா கூடாதா?

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினம், தினம் நடக்கும் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இவற்றை தவிர, பாலியல் தொல்லைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

வீடுகள் தொடங்கி பணியிடங்கள் வரை இந்த பிரச்னைகள் இருக்கின்றன. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெரியாத பெண்ணிடம் இரவு நேரத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை மெசேஜ் செய்தால் அது ஆபாசத்திற்கு இணையானது என செஷன்ஸ் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை திண்டோஷியில் முன்னாள் பெண் கவுன்சிலரிடம் அவருக்கு தெரியாத நபர் ஒருவர், “you are slim, look very smart and fair, I like you” என வாட்ஸ்அப்பில் இரவில் மெசேஜ் அனுப்பியுள்ளார். தனக்கு இப்படி மெசேஜ் செய்ததற்கு எதிராக முன்னாள் பெண் கவுன்சிலர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதி என்ன சொன்னார்?

கடந்த 2022 ஆம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கி, அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது மாஜிஸ்திரேட் நீதிமன்றம். பின்னர், அந்த முடிவை எதிர்த்து அவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாக அவர் தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி டி. ஜி. தோப்ளே, "இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை புகார்தாரருக்கு "நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள்", "நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள்", "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்", "எனது வயது 40", "நீங்கள் திருமணமானவரா இல்லையா?", "எனக்கு உன்னைப் பிடிக்கும்" என புகைப்படங்களும் மெசேஜூம் அனுப்பப்பட்டுள்ளது.

தெரியாத பெண்ணுக்கு இரவில் இப்படி மெசேஜ் அனுப்புவது ஆபாசத்திற்கு இணையானது. எந்த திருமணமான பெண்ணோ அல்லது அவரது கணவரோ இதுபோன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஆபாச புகைப்படங்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.

Read Entire Article