ARTICLE AD BOX
*318 பேருக்கு நற்சான்று, 49 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
*ரூ.5.19 லட்சத்தில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் 76வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் தேசிய கொடியேற்றினார்.
தென்காசி மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 8.10 மணிக்கு வருகைதந்த கலெக்டர் கமல்கிஷோர், தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் அணிவித்து கவுரவித்தார். மாவட்டத்தின் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதி, பத்மஸ்ரீ விருது பெற்ற அமர்சேவா சங்கர் நிறுவனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.49 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு 26 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பீட்டிலும் மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 510 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு விருதுகள் பரிசுகள் வழங்கப்பட்டது. காவல்துறையில் 52 பேர், தீயணைப்பு மீட்பு பணிகள் 23 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 54 பேர், ஊரக வளர்ச்சி துறையில் 31 பேர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 9 பேர், பேரூராட்சிகள் துறையில் 4 பேர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 3 பேர், வேளாண்மை மற்றும் உழவர் நல துறையில் 10 பேர், மாவட்ட நில அளவை அலுவலகத்தை சேர்ந்த 5 பேர், கூட்டுறவுத் துறையில் 2 பேர், தோட்டக்கலை துறையில் 4 பேர், கால்நடை பராமரிப்பு துறையில் 4 பேர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 48 பேர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5 பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையில் 6 பேர், பள்ளி கல்வித்துறையில் 6 பேர் உள்பட மொத்தம் 318 பேருக்குநற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சிறப்பு பரிசுகள் மற்றும் விருதுகளாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையை சேர்ந்த 5 பேர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைச் சேர்ந்த 3 பேர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையைச் சேர்ந்த 4 பேர், மாவட்ட சமூக நல அலுவலகத்தை சேர்ந்த 31 பேர் உள்பட 49 பேருக்கு சிறப்பு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ வேங்கடரமணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா,குற்றாலம் சாரல் ரோட்டரி தலைவர் டாக்டர் முத்துராமன், கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரின் துணைவியர், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழா கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
The post தென்காசியில் குடியரசு தின விழா கோலாகலம் கலெக்டர் கமல்கிஷோர் தேசிய கொடியேற்றினார் appeared first on Dinakaran.