ARTICLE AD BOX
தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1,300 டன் உரம் மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படும். இதற்கு தேவையான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்குப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது கோடை, குறுவை சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறானர். நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1,300 டன் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், சூப்பர் உரங்கள் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து வந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
The post தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1,300 டன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தது appeared first on Dinakaran.