தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்

14 hours ago
ARTICLE AD BOX

*கலெக்டர் இளம்பகவத் தேசிய கொடியேற்றினார்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கலெக்டர் இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.4.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 76வது குடியரசு தின விழா தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

காலை 8.05 மணிக்கு கலெக்டர் இளம்பகவத் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், தொடர்ந்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அமைதியையும், உலக சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 681 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் கலெக்டர் வழங்கினார். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்்டர் இளம்பகவத் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் 54 பேருக்கு முதல்வரின் பதக்கங்களும், 73 காவலர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், முருகன், ஜெரால்டின் வினு, எஸ்ஐ முத்தமிழரசன், எஸ்எஸ்ஐ சேகர், மோகன்ஜோதி உள்ளிட்ட 73 பேருக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் மாற்றத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்டவற்றின் சார்பில் மொத்தம் 67 பயனளிகளுக்கு ரூ.4 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரத்து 556 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் தூத்துக்குடியில் உள்ள 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 2500 பேர் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக தூத்துக்குடி சைனிக் பள்ளி மாணவர்களின் பேக் பைப்பர் இசை நிகழ்ச்சி நடந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.

விழாவில் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, டிஆர்ஓ ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரம்ம நாயகம், ஆர்டிஓ பிரபு, ஆதிதிராவிடர் நல அலுவலர் செபஸ்தியான், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷாதேவி, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், தாசில்தார் முரளிதரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார், ஏடிஎஸ்பி ஆறுமுகம், டவுன் ஏஎஸ்பி மதன், பயிற்சி ஏஎஸ்பி மீனா, டிஎஸ்பி தீபு, இன்ஸ்பெக்டர்கள் உமையொருபாகம், திருமுருகன், பாஸ்கரன், சுணைமுருகன், போலீஸ் மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பா திரளான பொதுமக்கள் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு விழா நடந்த தருவை மைதானத்திற்கு 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article