தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

3 hours ago
ARTICLE AD BOX
today rain news

சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில்ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். எனவும், சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article