ARTICLE AD BOX
தூக்க முடியாமல் தூக்கும் ஸ்ருதிஹாசன் பேக்கின் விலை இவ்வளவா? ஆத்தி தலையே சுத்துதே!
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராகவும், அரசியல் வாதியாக இருக்கும் கமலஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது, ஸ்ருதி, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் காரில் இருந்து வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஸ்ருதி வைத்து இருக்கும் கைப்பையின் விலையை கேட்டு ரசிகர்கள் வாயடைந்து போய் உள்ளனர்.
ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அந்த படத்தை தொடர்ந்து தனுஷூடன் த்ரி படத்தில் நடித்தார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதால் பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்று விட்டார். ஸ்ருதி ஹாசன் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகை ஸ்ருதிஹாசன்: மும்பையில் தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஸ்ருதிஹாசன், சாந்தனுவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டப் புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்து நீக்கினார். இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜூடன் சேர்ந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டார்.
கூலி படத்தில்: இந்த நட்பின் மூலம் கிடைத்த பயனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா,மகேந்திரன் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். அன்பரிவ், சண்டை கலைஞர்களாக இருக்கின்றனர். கூலி படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

பேகின் விலை எவ்வளவு தெரியுமா?: இந்நிலையில் ஸ்ருதி ஹாசன், காரில் இருந்த இறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்ருதி கையில் வைத்து இருக்கும் பேகின் விலைia கேட்டு இணையவாசிகளுக்கு தலை சுற்றலே வந்துவிட்டதாம். அதாவது, அந்த பேகின் விலை 86 ஆயிரமாம். என்னத்தான் நடிகையாக இருந்தாலும் இந்த விலை டூமச் என்றும், அப்படி அந்த கைபையில் என்ன இருக்கு என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஸ்ருதிஹாசனின் தந்தை உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக இருந்தாலும், நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து சம்பாதித்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். அவரே நடித்து சம்பாதித்த சொத்து மட்டும் ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், சொகுசு பங்களா, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். இவை எல்லாம் அவர் உழைத்து சம்பாதித்தது தான்.