ARTICLE AD BOX
விருந்து நிகழ்ச்சி என்றால் அதில் அப்பளம் இல்லாமல் அந்த விருந்து நிறைவு பெறாது. அந்த அளவிற்கு உணவல் அப்பாளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருந்து நிகழ்ச்சி மட்டுமல்லாமல், நம் வீட்டில், சைடிஷ் எதுவும் இல்லை என்றால் உடனடியாக செய்வது அப்பளம் பொறிப்பது தான். சாம்பார், ரசம் என எதுவாக இருந்தாலும் சைடிஷாக அப்பளம் இருந்தால் அதிகமாக சாப்பிடும் நபர்களும் இருக்கிறார்கள்.
புதிதாக திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் அப்பாளம் பரிமாறும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இந்த அப்பளத்தை எண்ணெயில் பொறித்து எடுப்பார்கள். ஆனால் சில வகை நோய் பாதிப்பு இருப்பவர்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடாதவர்களுக்கு எண்ணெயில் பொறிக்கும் அப்பளம் சரியான உணவாக இருக்காது. இதனால் அவர்கள் அப்பளம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அப்பளத்தை எண்ணெயில் மட்டும் தான் பொறிக்க வேண்டுமா?
துளி கூட எண்ணெய் இல்லாமல், அல்லது சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தி அப்பளத்தை பொறித்து எடுக்கலாம். எப்படி தெரியுமா? ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதின் நடுவில் ஒரு கொட்டாங்குச்சியை வைத்து, அதனை சுற்றிலும், உப்பை வைத்துவிட்டு, அதன் மீது அப்பளத்தை வைத்து குக்கரை மூடிவிடவும். மறக்காமல், குக்கரில் விசில் வைத்துவிட்டு, அடப்பை ஆன் செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன்பிறகு அதை திறந்து பார்த்தால், அப்பளம் சரியான அளவில் பொறிந்திருக்கும்.
அதேபோல், சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தி அப்பளம் பொறிப்பது எப்படி என்றால், நாம் தோசை கல்லில் எண்ணெய் தடவ பயன்படுத்தும் துணியை வைத்து அப்பளத்தில், தடவி எடுத்துக்கொண்டு, அந்த அப்பளத்தை தோசை கல்லில் வைத்து பொறித்து எடுக்கலாம். எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல்,இந்த முறையில் அப்பளத்தை பொறித்து எடுத்தால் சுவையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்களேன்.