ARTICLE AD BOX

இந்திய அளவில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்து பெண் ஆளுமையாக வலம் வந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 77வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்கள்.
அதன் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஜெயலலிதா அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று.
எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.