துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுதானா?

3 hours ago
ARTICLE AD BOX

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்படம் கடன் பிரச்னையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

இதையும் படிக்க: பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? மறுக்கிறார் மகன்!

இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் இந்தாண்டு கோடை வெளியீடாக மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான, பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் இந்த முறை உறுதியாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Read Entire Article