ARTICLE AD BOX

துபாய்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாலன் கிரீக்ஸ்பூர் 2-6, 7(9)-6(7), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் .