ARTICLE AD BOX
துபாய்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரெஞ்ச் வீரரான ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ் 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் காலிறுதியில் டாலன் கிரிக்ஸ்பூர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
Related Tags :