ARTICLE AD BOX
தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இன்னும் சற்றுநேரத்தில் தில்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதில், முதல்கட்டமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் விஜேந்தர் குப்தா பேரவைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
மொத்தம் 70 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 48, ஆம் ஆத்மிக்கு 12 உறுப்பினர்கள் உள்ள நிலையில், விஜேந்தர் குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.